முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக 37 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது, வாக்குச்சாவடிகளில் கொரோனா நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என்றும்,
மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வாக்கு எண்ணும் மையம் மற்றும் பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி பொறுப்பேற்பு

Gayathri Venkatesan

டி-20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

Ezhilarasan

வைரலாகும் ’சரங்க தரியா’ பாடல்!

Halley karthi