முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.57 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3,449 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஐபிஎல் விளையாடும் வீரர்களையும் அது பாதித்து வருகிறது. நேற்றைய தினத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து நேற்றைய ஆட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலையில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை சேர்ந்த ரித்திமன் சாகாவுக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதியானது. டெல்லி கேப்பிடஸ் அணியின் வீரர்கள் அமித் மிஸ்ராவுக்கும், விர்த்திமன் சாஹாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ரஞ்சிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

Saravana Kumar

முதல்வரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு!

Karthick

2020ம் ஆண்டில் பிரபலங்கள் மத்தியில் ட்ரெண்டான ஃபேஷன் ஆடைகள்!

Jayapriya