‘மீசைய முறுக்கு 2’ : நான்கு நாட்களில் 50 கோடி வசூல்…!

ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், ராப் பாடகருமான ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். இப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் மீசைய முருக்கு திரைப்படத்தின் 2-ஆம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ கடந்த செபடம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஹிப் ஹாப் ஆதியின் எழுத்து, இயக்கம், இசை, நடிப்பில் உறுவாகியுள்ள இப்படத்தில் கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், விஜய் வரதராஜ், நாசர் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பேற்று வருகிறது. இசைத்துறையில் உள்ள அரசியல் , நெபோட்டிசம் ஆகியவற்றை நகைச்சுவைகாய பேசும் இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது,

செ.25ம் தேதி வெளியான இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.51.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.