இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18வது சீசன் இன்று தொடங்கியது. முதல் போட்டியான இன்று நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜின்கியா ரகானே 56 ரன்களும், சுனில் நரைன் 44 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா மூன்று விக்கெட்டுகளும்,ஜோஷ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







