ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி – டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு!

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று(ஜுன்.03) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதல் கோப்பை கனவுடன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை நடந்த 17 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் பெங்களூர் அணி  2009, 2011, 2016  ஆகிய மூன்று ஆண்டுகள் இறுதி போட்டிக்கு முன்னேறி தோல்வியடைந்தது. அதே போல் பஞ்சாப் அணி 2014 ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு முன்னேறி தோல்வியடைந்தது. தங்களது கோப்பை கனவை நிறைவேற்றி ஐபிஎல்-ல் முத்திரை பதிக்க இரு அணிகளும் இன்று மோதவுள்ளன. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டாஸை வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூர் அணி பிளேயிங் லெவன்:-

விராட் கோலி, ஃபில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் அணி பிளேயிங் லெவன்:-

பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், வைஷாக் விஜய் குமார், கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.