ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் அதிரடி காட்டிய லக்னோ அணியின் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படியுங்கள் : பந்துவீச்சில் தெறிக்கவிட்ட லக்னோ; 121 ரன்கள் குவித்த ஹைதராபாத் !
இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 16 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 35 ரன்களும், க்ருணால் பாண்டியா 34 ரன்களும் விளாசினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, 34 ரன்கள் எடுத்த க்ருணால் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வானார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு லக்னோ அணி முன்னேறியுள்ளது.