டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 167 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. ஷிவம் துபே 25 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்கள், அம்பத்தி ராயுடு 23 ரன்கள், ரஹானே மற்றும் ஜடேஜா தலா 21 ரன்கள், கேப்டன் எம்.எஸ்.தோனி 20 ரன்களும் அடித்தனர்.
இதையும் படியுங்கள் : தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மிட்செல் மார்ஷ், அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெல்லி அணிக்கு 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருவதால், போட்டியின் இரண்டாவது பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.







