சாலைகள் தோண்டப்பட்டால், அவற்றை உடனே சீர் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சாலை மற்றும் பாலப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் பேசிய முதலமைச்சர், தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என குறிப்பிட்டார். பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலமைச்சர், துறைகளுக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பணி முன்னேற்றத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனடியாக தலைமைச்செயலாளர் அல்லது துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பணி முன்னேற்ற அறிக்கையை தனக்கு அனுப்பி வைக்குமாறு துறை செயலாளர்களை உத்தரவிட்டார்.







