ஐபிஎல் 2023; கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இதற்கு முந்தைய ஆட்டத்தில் பல முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்மை இந்தியன் அணியை எதிர்க்கொண்டது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.