இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஆக்லாந்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி நடைபெற இருந்த 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி இத்தொடரில் 2-0 என முன்னிலையில் நீடிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி பே ஓவல், மௌண்ட் முன்கானுயில் இன்று நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அணி விவரம்
இந்தியா : ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்(c), இஷான் கிஷன்(wk), அக்சர் படேல், நமன் திர், அவுகிப் நபி, குல்தீப் யாதவ், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து : டிம் சீஃபர்ட்(wk), வில் யங், நிக் கெல்லி, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(c), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், மாட் ஹென்றி, மேத்யூ ஃபிஷர்




