31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த டிஜிபி

பிரதமர் வருகையை ஒட்டி சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காவல்துறை
தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னைக்கு வருகிறார். அதேபோல் சென்னை – கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதேபோல
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை துவக்கி
வைக்க உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎஃப் அதிகாரிகள் மற்றும் தமிழக டிஜிபி ஆய்வு மேற்கொண்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இங்கு கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்துவது, அருகில் உள்ள கட்டிடத்தில் போலீஸார் பாதுகாப்பு, 11-வது நடைமேடையில் நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி நிகழ்ச்சிக்கான
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

குழந்தைத் திருமண மசோதா – நிலைக்குழு கால அவகாசம் நீட்டிப்பு

Mohan Dass

இந்தி கற்பதில் தவறில்லை; இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

G SaravanaKumar

அடுத்தது மகாராஷ்டிர முதல்வர் பதவி தான்…. அஜித் பவார் அதிரடி…

Web Editor