முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

IPL 2022: 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணி இன்று மோதி வருகின்றனர். மேலும், முதல் முறை ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்தா சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். பந்து வீச்சிற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து உமேஷ் யாதவ் களமிறங்கினார்.

மேலும், 2 ஒவ்வர்கள் முடிவுற்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் விக்கெட்டை இழந்தது. ருத்துராஜ் ரன் ஏதும் எடுக்காமல் 4 பந்துகளில் ஆட்டம் இழந்தார். உத்தப்பா மற்றும் கான்வே விளையாடி வருகின்றனர். 4.1 பந்துகளில் ஆட்டம் இழந்தார் கான்வே. இந்நிலையில், 2 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது.

இந்நிலையில், 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த சிறுத்தை பிடிபட்டது

G SaravanaKumar

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 198 கிராம் தங்கம் பறிமுதல்

G SaravanaKumar

‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இளையராஜா வாழ்த்து

G SaravanaKumar