முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, திமுகவினரின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழ்நாட்டிற்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ள நிலையில், அவர் மீது அவதூறு பரப்பும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருவதாகவும், இதற்காக 100 கோடி ரூபாய் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.
1/2
— K.Annamalai (@annamalai_k) March 26, 2022
மேலும், 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த அவதூறு நோட்டீஸுக்கு பதிலளிக்கும் வகையில், “ரூ.100 கோடி கேட்டு திமுக, அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. என்னை போல சாமானியனை அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்திற்கு சமமாக பார்கின்றனர்; நீதியை முழுமையாக நம்புகிறேன். எல்லா அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத்தில் சந்திப்பேன், எனது போராட்டம் தமிழ்நாட்டிற்காக. நஷ்டஈடு கேட்கும் திமுகவினரின் அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.