’மாநாடு’படத்தின் ட்ரைலரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் ஆகியோர் நடித்திருகின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் மீண்டும் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது என்றும் படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடந்து வருவதாக பட குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் 4 நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது மாநாடு படத்தின் ட்ரைலரை 1 கோடிக்கு அதிகமானவர்கள் யூடியூபில் பார்துள்ளனர். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முன்பே அறிவிப்பு வெளியானது குறிப்பிடதக்கது.







