நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த 9ம் தேதி சென்னை
சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிது.
கொரோனா பரவல் அச்சுறுத்தலால் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று
வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் போட்டியில் 21வது லீக்
போட்டி பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 2 போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும், கொல்கத்தா அணி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணி தீவிர முயற்சி செய்யும். இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் பஞ்சாப் 9 போட்டிகளிலும் கொல்கத்தா 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.