செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் , கூவத்தூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு…

செங்கல்பட்டு மாவட்டம் , கூவத்தூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்குக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் கூவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.