முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் : சுனில் நரேன் மிரட்டல், விராத் அணியை வெளியேற்றியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில், விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, கொல்கத்தா அணி வெளியேற்றியது.

ஐபிஎல் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெளியேறுதல் சுற்றில் நேற்று மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல்லும், கோலியும் களமிறங்கினர். படிக்கல் 18 ரன்களிலும் விராத் கோலி 39 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. முதல் 10 ஓவர்களில், அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுடுத்து சிறப்பான நிலையில் இருந்த அணி, அடுத்து சரிய தொடங்கியது.

கொல்கத்தா அணியின் சிறப்பாக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெங்களூரு அணி வீரர்கள் எளிதாக தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் பெங்களூரு அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த தொடக்க வீரர்களாக சுப்மன் கில்-லும் வெங்கடேஷ் ஐயரும் களமிறங்கினர். பெங்களூரு பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இருந்தாலும் நிதானமாக ஆடி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக சுப்மன் கில் 18 பந்துகளில் 29 ரன்களும் சுனில் நரேன் 15 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் சார்ஜாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Advertisement:
SHARE

Related posts

சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்

Ezhilarasan

மயானத்திற்கு பாதை இல்லாததால் கண்மாய் வழியாக உடலை கொண்டு சென்ற அவலம்

Halley karthi

100 நாள் வேலைத்திட்ட ஊதியம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Ezhilarasan