ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்களும், பாதுகாப்பு பணியில் 6,228 போலீசாரும் ஈடுபட உள்ளனர்.வாக்கு எண்ணும் அறைகளில் அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோரை தவிர பொதுமக்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவினை காலை 8 மணிக்கு மேல் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.