முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா; ஜெயக்குமார்

பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என்றும், அதிமுகவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொன்விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் புதிய அவைத்தலைவர் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனக் கூறினார். பல சோதனைகள் இன்னல்களை தாங்கி வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக எனவும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டவர் சசிகலா என விமர்சித்த அவர், அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சியை பலப்படுத்த புதிய யூகம் வகுப்பது தொடர்பாக மட்டுமே கருத்துக்களை கூறியிறுந்தார். ஆனால், அவரின் கருத்துக்கள் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறதா?

Saravana

விரைவில் வருகிறது ‘வலிமை’ – அமைச்சர் அறிவிப்பு

Halley karthi

8-வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி