ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது டெல்லி…

ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை…

ராஜஸ்தான் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அணியில் ஒருவர் கூட அரை சதத்தை கடக்கவில்லை. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக லியாம் லிவிங்ஸ்டோன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக லியாம் 1 ரன்னுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்னுடனும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இவர்களை அடுத்து வந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவருடன் யாரும் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதல் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டும் சேர்த்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.