ஐபிஎல் 14-வது தொடருக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 13-வது தொடர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், துபாயில் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கோப்பையை தனதாக்கியது. இந்நிலையில், ஐபிஎல் 14வது தொடர், இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணாங்காளால் கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி, இந்தாண்டு இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி விஜய், கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட வீரர்களை ஐபிஎல் அணிகள் இந்த முறை விடுவித்துள்ளது.
இதனால், வீரர்கள் பலர் வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எந்த வீரர்கள் எந்தெந்த அணிகளுக்கு செல்லப்போகிறர்கள் என்ற ஆர்வம் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, சென்னையில், ஐபிஎல் 14வது தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







