சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடும் இந்த நாள், பாலின சமத்துவம், உரிமைகள் மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்துகிறது.
1900-களின் முற்பகுதியில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், உலகம் முழுவதும் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தை நினைவு கூர்கிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “வெல்லும் தமிழ்ப் பெண்களே…
நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடல் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிடமாடல் அரசு இருக்கிறது… அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







