மாமல்லபுரத்தில் நாளை முதல் 20-ம் தேதி வரை சர்வதேச அலை சறுக்கு போட்டி : தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது.…

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.

இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

3000 தர புள்ளிகளை கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர். இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் அருகே நடைபெறவுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.