குடிபோதையில் ஓட்டிவந்த கார் பறிமுதல்… இரவோடு இரவாக சொந்த காரை திருடிய உரிமையாளர் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததால், போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை காவல் நிலையத்திற்குள் புகுந்து திருடிய காரின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ்…

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததால், போலீசார் காரை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட காரை காவல் நிலையத்திற்குள் புகுந்து திருடிய காரின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை சந்திப்பில் நேற்று நள்ளிரவில் நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிகப்பு நிற மாருதி காரில் வந்த நபரை நிறுத்தி பரிசோதனை செய்தபோது அவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனம் ஒட்டிய நபர் தனியார் நிறுவன ஊழியர் அருண் கல்யான் என்பதும், தாஜ் நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது ஓட்டுநர் உரிமமும் இல்லாததால் அவரது காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்திய பின்னர் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்து விட்டு காரை எடுத்துக் கொள்ளும்படி அந்த நபரை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், பறிமுதல் செய்த காரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு போலீசார் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பிறகு அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்ட இடத்தில் அந்த கார் இல்லாததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது காரின் உரிமையாளரான குடிபோதையில் சிக்கிய நபர் சிறிது நேரம் சாலையிலேயே நின்று விட்டு மாற்றுச் சாவியை கொண்டு வந்து அவரது காரை அங்கிருந்து திருடி எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அருண் கல்யாணகுமார் என்ற அந்த நபர், போதையில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் காவல் நிலையத்தில் நிறுத்தி இருந்த அந்த காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் அவரது சொந்த வாகனத்தை திருடியதற்காக திருட்டு வழக்கை பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.