சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வில் அவர்களின் உள்ளடக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை இன்றைய தினத்தின் நோக்கமாகும்.
இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர–சகோதரிகள் அனைவருக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.







