கைதி 2 பற்றி கார்த்தி கொடுத்த சுவாரஸ்ய அப்டேட்

விஜய் 67 படத்தில் “கைதி ” அல்லது “விக்ரம் ” கதையை இணைப்பாரா லோகேஷ் ? கைதி 2 கதை என்னவாக இருக்கும் ? கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்”…

விஜய் 67 படத்தில் “கைதி ” அல்லது “விக்ரம் ” கதையை இணைப்பாரா லோகேஷ் ? கைதி 2 கதை என்னவாக இருக்கும் ?

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கைதி 2 படத்திற்கு ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆக்‌ஷன் திரில்லராக வெளியான “கைதி” மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, லோகேஷ் விஜயை வைத்து “மாஸ்டர்” படத்தை இயக்கினார். பின் அவர் தனக்கு மிகவும் பிடித்த “கமல்ஹாசனை” வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்தப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகத்திற்கும் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

விக்ரம் படத்தில்லோகேஷ், கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச்செய்தார். மேலும்,“சூரியா” வரும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.

இந்நிலையில், தற்போது விஜயுடன் மிண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ். விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் “வம்சி” இயக்கத்தில் வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதற்கிடையில், நடிகர் கார்த்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசுகையில் “கைதி”படப்பிடிப்பு விஜய் 67 படம் முடிந்தபின் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். லோகேஷ் விஜய் 67 படத்தில் “கைதி ” அல்லது “விக்ரம் ” கதையை இணைப்பாரா ? என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

மேலும், கைதி படத்தில் டில்லி (கார்த்தி) சிறைக்குச் செல்வதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார், அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையேயான கதை என்ன என்பதைப் பற்றியதாக ‘கைதி 2’ இருக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் பேசிவருகின்றனர். இதற்கிடையில், கார்த்தி சிறையிலிருந்தபோது கபடி வீரர் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தெரிவித்துள்ளார்.

 

-செ. யுதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.