குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில், கடலோர காவல்படையின் பாதுகாப்பு பணிகள், சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம், நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் ஊருடுவி தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் கடல், வான், தரைப் பகுதி எல்லைகளில் தீவிரக் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவதைத் தடுக்க ,கன்னியாகுமரி கடலோர காவல்படையினர் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் கடற்கரைப் பகுதியை ஒட்டி இருப்பதாலும், அங்கும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால், அதனை தடுக்க சஜாக் ஆபரேஷன் என்னும் படகு மூலம் கடலோரப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.







