பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார், என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இவர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இவர், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தனித்து பிரச்சாரம் செய்ய முடிவு எடுத்ததற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். திமுகவை நம்பி புதியவர்கள் யாரேனும் வந்தால், இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.







