ஹாலிவுட் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த Godzilla vs Kong திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
உலக அளவில் காட்சில்லா, கிங் காங் திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹாலிவுட்டில் இதன் கிராஃபிக்ஸ் மற்றவர்களை ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது. இதற்கு முன்னதாக காட்சில்லா குறித்தும் கிங் காங் குறித்தும், தனித்தனியே வெளியான படங்கள் வசூலில் சக்கைப்போடு போட, இந்த இரண்டு ராட்சத மான்ஸ்டர்களும் மோதும் திரைப்படத்திற்காக, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் முடக்கம், தியேட்டர்கள் திறக்காத நிலை, என அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் வர, படம் வெளியாகுமா இல்லையா என்ற கேள்வி, நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது. அதற்கெல்லாம் விடையாக இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருப்பது, ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. மேலும், இத்திரைப்படம் தியேட்டர் மற்றும் OTT தளமான H.B.O. MAX-ல் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..







