மதுரையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் – மாநகராட்சி

மதுரை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 15 மார்ச் 2021 முதல் 27 ஆகஸ்ட் 2021 வரை 52,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,818…

மதுரை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 15 மார்ச் 2021 முதல் 27 ஆகஸ்ட் 2021 வரை 52,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,818 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 27 ஒரே நாளில் 21,133 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாவது அலை ஆரம்பத்தில் தினமும், மதுரையில் மட்டுமே 1,800க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு கொரோனா கட்டுப்பாடுகளால் தொற்று பாதிப்பு படிபடியாக குறைந்து தற்போது தினமும் சராசரியாக 15 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தத் தொற்று பரவலை முற்றிலும் குறைக்க, மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரம் முன் தினமும், 1,800 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது தினமும், 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நேற்று வரை, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 10,23,215 ஆகும். தற்போது, பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.