கல்குவாரி விபத்து; 6வது நபரை மீட்கும் பணி தீவிரம்

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 6-வது நபரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே 6 பேர் சிக்கிக் கொண்டனர்.…

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 6-வது நபரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில், இடிபாடுகளுக்கிடையே 6 பேர் சிக்கிக் கொண்டனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின்னர், மூன்றாவதாக மீட்கப்பட்ட செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 300 அடி ஆழத்தில் விபத்து ஏற்பட்டதால் அவ்வப்போது மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே, நான்காவது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து மீதமுள்ள 2 பேரையும் மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது, இந்நிலையில், லாரிக்கு அடியில் சிக்கியிருந்த 5-வது நபர் கண்டறியப்பட்டார். ஆனால், மீட்புப் பணியின் போது மீண்டும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், மண்ணியல் துறை வல்லுநர்கள் ஆய்வறிக்கை கொடுப்பதை தொடர்ந்து மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கியது. தொடர் முயற்ச்சியின் காரணமாக 5 வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

அண்மைச் செய்தி: ‘‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா’

இந்நிலையில், எஞ்சியுள்ள ஒருவரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், 6-வதாக சிக்கியுள்ள நபர், ஊருடையார் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் எனவும், விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தொடர்ந்து இதர கல்குவாரிகளில் சோதனை மேற்க்கொள்ளப்படும் என குறிப்பிட்ட அவர், ராஜேந்திரன் சிக்கியுள்ள பகுதி தற்போது அடையாளம் காணப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.