முக்கியச் செய்திகள் இந்தியா

‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா

ஆந்திராவில், முதியவர் ஒருவர் அமைச்சர் ரோஜாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில், அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகிறதா என என கேள்வி எழுப்பிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அனைத்து அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் நேரடியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, புத்தூர் மண்டலத்தில் உள்ள ஒட்டிகுண்டல என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து, ஒவ்வொரு வீடாக சென்ற அவர், அப்பகுதி மக்களின் வாய்வழி கோரிக்கைகளையும், மனுக்களயும் பெற்றார். அப்போது, முதியவர் ஒருவரை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ‘அரசு வழங்கும் பென்சன் சரியாக கிடைக்கிறதா? அய்யா’ என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், ‘பென்சன் கிடைக்கிறது. ஆனால், மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை’ என தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? 50 பேர் விருப்பம்!’

முதியவரின் குறைகளை பொறுமையாக கேட்ட அமைச்சர் ரோஜா, ‘உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? உங்களின் மனைவி எங்கே?’ என கேட்டதற்கு, ‘பிரச்சனையே அதுதான், மனைவியும் இல்லை, குழந்தையும் இல்லை. எனக்கு நீங்கள் ஒரு திருமணம் செய்து வையுங்கள் துணை இல்லாமல் மிகுந்த சிரமமாக உள்ளது’ என கூறினார். அப்போது, முதியவர் சொன்ன பதில் அங்கு இருந்த அனைஅவரையும் சிரிக்க வைத்தது. அப்போது சிரித்தப்படியே அமைச்சர் ரோஜா, ‘நான் எப்படி பெரியவரே இதற்கு தீர்வு காண முடியும்’ என அங்கிருந்து கிளம்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஷ்ணு விஷாலின் “FIR” படத்துக்கு தடை ?

Saravana Kumar

உணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

காலநிலை மாறுபாடு பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson