கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுத்தவர்கள் களையெடுக்கப்பட்டு உள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
அதிமுகவின் 51வது ஆண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆண்டுவிழா பொதுக் கூட்டம் சிறப்பாக நடத்தப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இருந்தபோது கூட காவிரி நதிநீர்
பிரச்சினைக்கு அவையை ஒத்திவைக்கும் அளவுக்கு குரல் கொடுத்தோம். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு அதற்கான பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது என்றார்.
https://www.youtube.com/watch?v=S0-v2315HaY
கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்ததும்,
அவர்கள் மீது வழக்கு தொடுத்ததும் அதிமுக அரசுதான் என்று கூறிய எடப்பாடி
பழனிசாமி, ஆனால் அவர்களை ஜாமீனில் எடுத்தது யார்? என்பதை ஊடகங்கள் சொல்லவில்லை என்றார். குற்றவாளிகளை அண்டை மாநிலம் சென்று ஜாமீனில் எடுத்தது திமுக தான் என்று கூறிய அவர், கொடுங் குற்றவாளிகளுக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்றும் வினா எழுப்பினார். ஆனால் பத்திரிகைகளும், ஊடகங்களும் அதிமுகவின் மீது வேண்டுமென்றே அவதூறு செய்தி பரப்பி வருகின்றது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொடநாடு வழக்கை காலம் கடத்துவதற்காகவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஓ.பி.எஸ். அதிமுகவில் இணைக்ககூடாது என்பது 2,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழு எடுத்த முடிவு என்று அவர் தெரிவித்தார். ஜேசிடி பிரபாகரன் அதிமுக கட்சி வேட்டியே கட்டவில்லை என்றும் அவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று கூறுவது அசிங்கம். அவர் சீசனுக்கு பறவைகள் வருவதுபோல் பலகட்சிக்கு சென்றவர் என்றார்.
என்மீது அறப்போர் இயக்கம் போட்ட அவதூறு வழக்கை திரும்ப பெறுவதாக ஆர்எஸ் பாரதி கூறினார். நான் மறுத்துவிட்டேன். அதிமுகவிற்கு மடியில் கணம் இல்லை அதனால் வழியில் பயமில்லை என்றார். கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுத்தவர்கள்களை எடுக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு பயிர் செழித்து வளர வேண்டும் என்றால் களை எடுப்பது அவசியம் என்றார்.







