உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள…

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து காலை 7 மணிமுதல் மக்கள் மும்முரமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த முதல் கட்ட வாக்குப்பதில் மாவட்ட கவுன்சிலர், கிராம தலைவர் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான வேட்வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான கிராம நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளியாகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அதற்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.