போச்சம்பள்ளி அருகே காட்டு யானைகளோடு செல்பி எடுக்க முயன்றவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஹள்ளி
காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் போச்சம்பள்ளி
அருகே உள்ள புங்கம்பட்டி கிராமத்தில் சுற்றி வந்தன.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (27) என்பவர் தனது வீட்டிற்கு வெளியே இரண்டு யானைகள் நிற்பதை கண்டு, அதிர்ச்சியடைந்து பின்னர் பக்கத்தல் சென்று
செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில்
ராம்குமாரை தாக்கிய யானை, அவரை தந்தத்தால் நெஞ்சில் தாக்கியுள்ளது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: