விருதுநகர் அருகே சின்னகுட்டம் மலைப் பகுதியில் காட்டு தீ.!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை அடுத்த சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. மேலும் தீ தொடர்ந்து பரவி வருவதால் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வத்திராயிருப்பை அடுத்த நெடுங்குளம்…

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை அடுத்த சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. மேலும் தீ தொடர்ந்து பரவி வருவதால் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வத்திராயிருப்பை அடுத்த நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள சின்ன குட்டம் மலை அடிவாரத்தில் உள்ள விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் தென்னை மற்றும் மா போன்ற மரங்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சின்ன குட்டம் பகுதியில் சிறிதாக ஏற்பட்ட காட்டு தீ  பெரும் அளவு பரவி வந்துள்ளது. இதை தொடர்ந்து மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள விவசாயிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.