முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரவிந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனானார். ஆனால் ஜடேஜாவில் தலைமையில் சிஎஸ்கே அணி தொடர்ந்து சரிவை சந்தித்தது. 8 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றது. 6 போட்டிகளில் தோல்வியை தழுவி 4 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் நீடித்தது.

இதனால் தொடரின் பாதியிலேயே கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய ஜடேஜா, தோனியிடம் மீண்டும் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த நிலையில் ரவிந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 இல் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது கேட்ச் பிடிக்க முற்பட்ட ஜடேஜாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. ஜடேஜா சிஎஸ்கே மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டபோதும், நடப்பு சீசன் முடிவதற்கு அவர் குணமாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக ஜடேஜா போட்டியிலிருந்து விலக இருக்கிறார். எஞ்சியுள்ள போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெற்ற ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள நிலையில், ஜடேஜாவில் விலகல் சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

Ezhilarasan

மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

Ezhilarasan

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை!

Jeba Arul Robinson