முக்கியச் செய்திகள் தமிழகம்

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு தேர்வாணைய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 5,529 பணி இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 வரை நடைபெற்றது.

குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க மொத்தம் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட்டுக்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை http://www.tnpsc.gov.in மற்றும் http://www.tnpscexams.in என்ற இரண்டு இணையதளங்களில் தங்களின் OTR மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் TNPSC தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து பயிலும் அமெரிக்க மாணவர்கள்

Ezhilarasan

துணைவேந்தர் சூரப்பா வழக்கில் விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!

Gayathri Venkatesan

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது; பிரேமலதா

Saravana Kumar