திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது? வெளியான புதிய அப்டேட்!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஏப்ரல் 19-ம்…

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் திமுக படுவேகமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்டதை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் ( தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது. மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.