கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த ராஜசேகரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அதில், அவரது உடலில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. உடற்கூறு ஆய்வின் வீடியோ பதிவு காப்பி கொடுக்கப்பட்டால் உடலை வாங்குவதாக இல்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
வலது உள்ளங்கை முதல் முட்டி வரை ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கும் ஒரு சென்டி மீட்டர் அகலத்திலும் ரத்தக் கட்டுகள் உள்ளது. வலது முட்டியில் 9 சென்டி மீட்டரில் ரத்த காயங்களும், இடது கால் தொடையின் முன்புறம் 9 சென்டி மீட்டர் நீளத்திற்கு காயங்களும் இருந்தது. கால் தொடையின் பின்புறம் 4 சென்டி மீட்டர் நீளத்திற்கு 12 காயங்கள் உள்ளது.
இதயத்தில் தற்செயலான பாதிப்பு ஒன்று உள்ளதாகவும் இது சிகரெட் பிடிக்கும் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான் என்றும் இதற்கும் மரணத்திற்கும் காரணம்
இல்லை என்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ராஜசேகர் விசாரணையின் போது இறந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியை சேர்ந்த இராஜசேகர் என்பவர் வழக்கு விசாரணைக்காக கொடுங்கையூர் போலிசாரால் கடந்த வெள்ளிக்கிழமையன்று காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததையடுத்து ஞாயிற்றுகிழமை காலை விசாரணை நேரத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து நீதிபதி குழவினர் கொடுங்கையூர் காவல்நிலையம் வந்து ராஜசேகரணின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் மூன்று மணிநேரம் விசாரணை நடைபெற்றது அதனை தொடர்ந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த தடவியல் துறை உதவி பேராசியர் பாலசுப்பிரமணியம்
மற்றும் மருத்துவ குழுவினருடன் நீதிபதி லஷ்மி விசாரணை மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு அறைக்கு சென்று பார்வையிட்டு பிறகு சிறிது நேரத்தில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து ராஜசேகரின் குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கையை 4 வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
-மணிகண்டன்







