கடும் பனிமூட்டம்: நோய்த் தொற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கடும் பனிமூட்டத்தால் நோய்த்தொற்று வேகமாக பரவுவதாக சிம்ஸ் மருத்துவமனையின் தொண்டை காது, மூக்கு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர், பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால்,…

கடும் பனிமூட்டத்தால் நோய்த்தொற்று வேகமாக பரவுவதாக சிம்ஸ் மருத்துவமனையின் தொண்டை காது, மூக்கு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர், பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், சென்னையில் வசிக்கும் பொது மக்கள் இருமல், சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் போன்ற நோய் தொற்றால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த நோய் தொற்றானது பரவி வருவதால் பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி குள்ளாகி வருகின்றனர்.

இந்த நோய் தொற்றானது பொதுமக்களுக்கு பரவுது மட்டும் இன்றி குழந்தைகளுக்கும்
பரவி வருவதால் குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நோய்
தொற்றினை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் எனவும், நோய் தொற்று
வருவதற்கு முன்பாக என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்றும், இந்த
நோய் தொற்று குழந்தைகளுக்கு வராமல் எப்படி தடுக்கலாம் என்று சிம்ஸ்
மருத்துவமனையின் தொண்டை காது, மூக்கு, சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் நடராஜன் கூறுகையில், தற்போது நிலவி வரும் பனி மூட்டத்தினால் நுண்ணுயிர் கிருமிகள் பொதுமக்கள் மூச்சுவிடும் பொழுது அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி இருந்தால் அந்த திரவமானது காற்று மூலம் சுலபமாக பரவும். இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், கைக்குட்டையை பயன்படுத்தினால் தொற்று நோயைத் தடுக்க முடியும்.

இந்த நோய் தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியே சென்று வந்தால் கைகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு தீவிர சிகிக்சை எடுக்கத் தேவையில்லை. சாதராண சிகிச்சை மேற்கொண்டாலே போதுமானது. வெளியே செல்லும்போது பாதுகாப்பான உடை அணிந்து செல்ல வேண்டும். வெளியே
சென்று வந்த பிறகு ஏதேனும் நோய் அறிகுறி இருந்தால் ஆவி பிடித்தால் போதுமானது என்று கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.