ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறியதற்காக இந்திய அணி பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலியா- இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கிய இந்திய முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றது. ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா 70 ரன்களும் அக்சர் படேல் 84 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அறிமுக வீரர் முர்பி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் முதல் இன்னிங்க்ஸை ஆஸ்திரேலிய அணி பேட்டிங் விளையாடிய போது ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது. சிராஜிடமிருந்த கிரீமை தன் இடக்கை சுட்டு விரலில் ஜடேஜா தேய்த்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தனது விரலில் வலி நிவாரண மருந்தை ஜடேஜா பயன்படுத்தியதாக இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிறகு வலி நிவாரண மருந்தையே தனது விரலில் ஜடேஜா பயன்படுத்தியதாக தெரியவந்தது.
அண்மைச் செய்தி:விடிய விடிய நடைபெற்ற ஓசூர் கிராம தேவதைகள் பல்லக்கு திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இருப்பினும் விதிமுறைகளின் படி, மருந்தை பயன்படுத்துவதற்கு நடுவர்களிடம் அனுமதி பெறவேண்டும். பந்தை சேதப்படுத்தப்படாமல் இருப்பதற்காக இந்த விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், நடுவர்களின் அனுமதியை பெறாமல் இந்த செயலை செய்ததற்காக ஜடேஜா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என ஐசிசி கூறியுள்ளது.