இதனையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 18 ரன்கள் எடுத்திருந்த போது, அம்பயரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா 27 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த விராட் கோலி – ரஹானே ஜோடி, இந்திய ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதன் மூலம், போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, 280 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.







