சர்ச்சையை ஏற்படுத்திய ”கேமரூன் கிரீன்“ கேட்ச்- கடுப்பான ”சுப்மன் கில்“ அதிருப்தி ட்வீட்!

தனது விக்கெட்டை ஏற்றுக் கொள்ள முடியாத சுப்மன் கில், கேமரூன் கிரீன் பிடித்த கேட்ச் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.…

தனது விக்கெட்டை ஏற்றுக் கொள்ள முடியாத சுப்மன் கில், கேமரூன் கிரீன் பிடித்த கேட்ச் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 18 ரன்கள் எடுத்திருந்த போது, அம்பயரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்தார்.

ஸ்காட் போலண்ட் வீசிய பந்து சுப்மன் கில் பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் கிரீன் கையில் கேட்சாக சென்றாது. ஆனால், சுப்மன் கில்லோ, கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த விதத்தை திருப்தி அடையாமல் சந்தேகத்தில் களத்திலேயே நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட்டா இல்லையா என்பதை தீர்மானிக்க கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.

மூன்றாவது நடுவர், பந்து தரையில் படுவது தெளிவாக தெரிந்த போதிலும் சுப்மன் கில்லிற்கு அவுட் கொடுத்தனர். இதனால் சுப்மன் கில் தேவையே இல்லாமல் விக்கெட்டை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

https://twitter.com/ShubmanGill/status/1667581278365929472?s=20

இந்ந நிலையில், தனது விக்கெட்டை ஏற்றுக் கொள்ள முடியாத சுப்மன் கில், கேமரூன் கிரீன் பிடித்த கேட்ச் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.