இந்தோனேசியாவில் 56 பயணிகள் உட்பட 62 பேருடன் மாயமான விமானத்தின் இரு கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட போயிங் 737-500 ரக விமானம், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்தது. 3 கைக்குழந்தைகள் உட்பட 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர், விமானத்தில் இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. மீட்புக்குழுவினர் தேடுதல் பணியில், விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் பாகங்கள் கிடைத்தன. இந்த நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் விமானத்தின் இரு கருப்பு பெட்டிகள் இருக்கும் இடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகளில், அந்நாட்டு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.