இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கவின், சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் மூலம் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 மாதங்களுக்கு முன் பணிக்கு சென்ற கவின், கடந்த 8-ம் தேதி சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில், இந்தோனேஷிய விமான நிலையத்தில், கவின் உள்ளிட்ட 6 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கவின் உள்ளிட்ட 6 பேரையும் 16 நாட்களாக சிறை பிடித்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்களை தமிழ்நாடு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என உறவினர்கள் கோரிக்கை விடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் சந்திரலேகாவிடம் மனு அளித்தனர்.







