இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: ஆஸ்திரேலியாவுடன் விரைவில் ஒப்பந்தம்!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் செயல்பட உள்ளது. விரைவில் ஆஸ்திரேலியா பிரதமர் – இந்திய பிரதமர் இடையே கையெழுத்து ஒப்பந்தமாக…

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் செயல்பட உள்ளது. விரைவில் ஆஸ்திரேலியா பிரதமர் – இந்திய பிரதமர் இடையே கையெழுத்து ஒப்பந்தமாக உள்ளது.

சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Deakin University குஜராத் மாநிலத்தில் துவங்கப்பட உள்ளது. MBA, MS என்ற இரண்டு courses துவங்கப்பட உள்ளன. முழு நேரமாக இரண்டு ஆண்டுகளும், பகுதி நேரமாக நான்கு ஆண்டுகளும் பயிலலாம். விரைவில் ஆஸ்திரேலிய பிரதமரும் இந்திய பிரதமரும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.

இதையும் படிக்க: ஆஸ்கார் விருது விழாவின் தொகுப்பாளராகிறார் தீபிகா படுகோனே – ரசிகர்கள் உற்சாகம்

2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வகுப்புகளை துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று பயிலும் இந்திய மாணவர்கள் நம் நாட்டில் படித்து பணிபுரிய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கும். குஜராத் மாநிலம், அகமதாபாத் கிப்ட் சிட்டியில் இந்த வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.