95வது ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்களில் தீபிகா படுகோனே பெயர் இடம் பெற்றுள்ளது.
உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கும் 95 வது ஆஸ்கார் விருதுகள் மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் மற்றும் மார்ச் 13 ஆம் தேதி காலை இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 95வது ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள்ளது. இந்த தொகுப்பாளர்கள் பட்டியலில் தீபிகா படுகோனே பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் அவர்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Meet your first slate of presenters for the 95th Oscars.
Tune into ABC to watch the Oscars LIVE on Sunday, March 12th at 8e/5p! #Oscars95 pic.twitter.com/U87WDh88MR
— The Academy (@TheAcademy) March 2, 2023
அத்துடன், எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR படத்திலிருந்து நாட்டு நாடு பாடல், அதன் பாடகர்களான ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோரால் ஆஸ்கார் 2023 மேடையில் நேரலையில் நிகழ்த்தப்படவுள்ளது.
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலை எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் எழுதியுள்ளார், மேலும் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.
ஆஸ்கார் விருதுக்குள் நுழைவதற்கு முன், ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருதையும் நாட்டு நாடு வென்றது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த அசல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்கார் 2023 மேடையில் RRR படத்திலிருந்து நாட்டு நாடு பாடல் நேரலையில் நிகழ்த்தப்படவுள்ளது. இந்தப் பாடல் இந்தியில் நாச்சோ நாச்சோ என்றும், தமிழில் நாட்டுக் கூத்து என்றும், கன்னடத்தில் ஹல்லி நாடு என்றும், மலையாளத்தில் கரிந்தோல் என்றும் வெளியிடப்பட்டது. அதன் இந்தி பதிப்பை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் விஷால் மிஸ்ரா பாடியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நிகழ்த்திய ஹூக் ஸ்டெப், சமூக ஊடகங்களில் வைரலானது.