விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

இந்தியாவில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகம் செய்துவைத்தார். இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான அனகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த…

இந்தியாவில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகம் செய்துவைத்தார்.

இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான அனகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கழகம் ( ICAR-NRC) உருவாக்கியுள்ளது. அனகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசி டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கோவிட் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் என்றும், பெரும்பாலான கோவிட் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றும் இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் கூறியுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி நாய், எலி, சிங்கம், சிறுத்தை, பூனை போன்ற விலங்குகளுக்கு பாதுகாப்பானதாகும் என்று ICAR-NRC தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், “விஞ்ஞானிகளின் அயராத பங்களிப்பு மூலம் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்வதைக் காட்டிலும் சொந்த கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் தற்சார்பு நிலையை இந்தியா அடைய முடிந்துள்ளது. விலங்குகளுக்கான உள்நாட்டு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டிருப்பது  மிகப்பெரிய சாதனை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.