10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த அஞ்சல் துறை அதிகாரியால் பெண் ஒருவர் பரிதவித்துள்ளார்.
புதுக்கோட்டை போஸ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியும் அவரது மகனும் உண்டியலில் சேர்த்துவைத்த ரூபாய் 1000-தை, தபால் நிலைய சேமிப்பு கணக்கில் செலுத்தச் சென்றுள்ளார் புவனேஸ்வரி. அவர் கொண்டு சென்ற 1000 ரூபாய், 5 மற்றும் 10 ரூபாய் நாணயமாக இருந்துள்ளது. 10 ரூபாய் நாணயம் இருந்ததைப் பார்த்த அந்த தபால் நிலைய அலுவலர் அந்த நாணயத்தை வாங்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, புவனேஸ்வரி தலைமை தபால் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்தும் எந்த பலனும் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து அந்த அலுவலருடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு 10 ரூபாய் நாணயங்களைத் தபால் நிலைய அலுவலர் பெற்றுக்கொண்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘“அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்’
இந்த சம்பவம் குறித்து, தபால் நிலைய அலுவலரிடம் கேட்டபோது, பாரத ஸ்டேட் வங்கியில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால், நாங்கள் பொதுமக்களிடம் 10 ரூபாய் நாணயங்களைப் பெறத் தயங்குவதாகத் தெரிவிக்கின்றார்.
இதுபோலவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை பல்வேறு இடங்களில் வாங்கத் தயங்கும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் அச்சத்தை அரசுதான் சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








